Sunday, September 24, 2023

Anaiyaatha Deepam Song Lyrics in Tamil

 அணையாத தீபம் மனிதாபிமானம் பாடல் வாிகள்

ம்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம்ம்
அணையாத தீபம் மனிதாபிமானம் உள்ளோர்கள் இங்கே யாரோ யார் யாரோ
அணையாத தீபம் மனிதாபிமானம் உள்ளோர்கள் இங்கே யாரோ யார் யாரோ

கால் போன ஜீவனை தோள் மீது கொண்டு
காப்பாற்றி வைத்தான் சித்தார்த்த தேவன்
சிந்தாத கண்ணீர் நான் சிந்துகின்றேன்
சித்தார்த்தன் இங்கே யாரேனும் உண்டோ
பாவங்கள் சிலர் செய்ய நான் பாவியானேன்
பரிகாரம் எங்கே தேவா தேவா
அணையாத தீபம் மனிதாபிமானம் உள்ளோர்கள் இங்கே யாரோ யார் யாரோ

நபிநாயகம் தன் நகர் மாறிச் சென்றார்
அயலார்கள் ஏச வருங்காலம் பேச
எதிர்கால உலகில் மரமாக நின்றார்
இங்கேயும் அவரின் நிழல் வாழுகின்றார்
எல்லார்க்கும் தாயான மாகாளி சக்தி
என் தெய்வம் நீயே நீயே தாயே
அணையாத தீபம் மனிதாபிமானம் உள்ளோர்கள் இங்கே யாரோ யார் யாரோ

கலைமாது மேரி ஓர் விலைமாது என்று
கல்லால் எறிந்தார்கள் ஊரார்கள் அன்று
நல்லோர்கள் அவள் மேல் எறியுங்கள் என்று
அல்லோர்கள் தம்மை அறியுங்கள் என்று
ஈசோன் என்ற ஒரு தேவன் சொன்னான் எறியுங்கள் நீங்கள்
எறியுங்கள் நீங்கள் ஐயா ஐயா
அணையாத தீபம் மனிதாபிமானம் உள்ளோர்கள் இங்கே யாரோ யார் யாரோ

Lyrics in English

Mmmmmm Hmm mm mm mm mmm
Anaiyadha deebam manidhabimaanam Ullorgal ingae yaaro yaar yarooo
Anaiyadha deebam manidhabimaanam Ullorgal ingae yaaro yaar yarooo

Kaal pona jeevanai thol meedhu kondu
Kaappatri veithaan sidhaartha dhevan
Sindhaadha kanneer naan sindhugiren
Sidharthan ingae yaaryaenum undoo
Paavangal silar seiya naan paaviyaanaen
Parigaaram engae devaa devaa
Anaiyadha deebam manidhabimaanam Ullorgal ingae yaaro yaar yarooo

Nabinayagam than nagar maari sendraar
Ayalargal yaesa varungaalam pesaEdhirgaala ulagil maramaaga nindraar
Ingaeyum avarin nizhal vaazhugindraar
Ellorkum thaaiyaana maakaali sakthi
En deivam neeyae neeyae thaaiyae
Anaiyadha deebam manidhabimaanam Ullorgal ingae yaaro yaar yarooo

Kalai maadhu maeri orr vilaimaadhu endru
Kallaal erindhaargal ooraargal andru
Nallorgal aval mel eriyungal indru
Allorgal thammai ariyungal endru
Eeson endra oru devan sonnan Eriyungal neengal
Eriyungal neenga aiyaa aiyaa
Anaiyadha deebam manidhabimaanam Ullorgal ingae yaaro yaar yarooo

Song Details

Movie name Yarukkum Vetkam Illai
Director Cho
Stars J. Jayalalitha, Sivakumar, Cho, Srikanth, Sukumari
Singers P. Susheela
Lyricist Kannadasan
Musician G.K. Venkatesh
Year 1975

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***