Sunday, July 25, 2021

Kadhal Sariththiraththai Padikka Song lyrics in Tamil

 Kadhal Sariththiraththai Padikka Song lyrics in Tamil

PS: காதல் சரித்திரத்தை படிக்க வாருங்கள்
ஆசை அரங்கேறி நடிக்க வாருங்கள்
காதல் சரித்திரத்தை படிக்க வாருங்கள்
ஆசை அரங்கேறி நடிக்க வாருங்கள்
மேகத்தை ஊஞ்சலிட்டு ஆட வைத்த மேனி இங்கே
மோகத்தை ஆடையிட்டு மூடி வைத்த ராணி இங்கே
மேகத்தை ஊஞ்சலிட்டு ஆட வைத்த மேனி இங்கே
மோகத்தை ஆடையிட்டு மூடி வைத்த ராணி இங்கே
கொதிக்கும் கோடை தணிக்கும் வேளை
கடைக்கண் ஜாடை தொடுக்கும் பார்வை
காதல் சரித்திரத்தை படிக்க வாருங்கள்
ஆசை அரங்கேறி நடிக்க வாருங்கள்

TMS: வளைக்கைக் கொண்டு வளைக்கும் செண்டு
செவ்விளநீரை இடைத் தாங்கும் இளம் வாழைத்தண்டு
வளைக்கைக் கொண்டு வளைக்கும் செண்டு
செவ்விளநீரை இடைத் தாங்கும் இளம் வாழைத்தண்டு
மலர் தேன் உண்டு பனிக்கண் கொண்டு
தன் மகராஜன் குடியேற வரும் நேரம் இன்று
கொடிக்குள் ஆடும் கனிக்குள் ஊறும்
இனிக்கும் சாரம் கிடைக்கும் காலம்
ஆனந்த நாடகத்தை ஆட வந்த பாத்திரங்கள்
ஆரம்ப நாளை எண்ணி காத்திருக்கும் நேத்திரங்கள்
காதல் சரித்திரத்தை படிக்க வந்தாயோ
ஆசை அரங்கேறி நடிக்க வந்தாயோ

PS: இயற்கை காட்சி நமக்கோர் சாட்சி
நம் ராஜாங்கம் நாள்தோறும் ரதிதேவன் ஆட்சி
இதழ் வாய் திறந்து எடுத்தேன் விருந்து
என் மலர்மேனி நோகாமல் மெதுவாக அருந்து
பனிப்புல் மீது படுக்கைப்போட்டு
மணக்கும் கவிதை மனம்போல் தீட்டு

TMS: மலைமேல் நின்று கலைமான் ஒன்று
உன் விழிப்பார்த்து விளங்காமல் வழிமாறும் இன்று
PS: மழைநீர் கொண்டு முகில் போல் வந்து
செந்தளிர் பூவை தாலாட்டு தலைவா நீ இன்று
TMS: சிலிர்க்கும் அங்கம் சிவக்கும் வண்ணம்
PS: அணைக்கும்போது மயங்கும் மாது
காதல் சரித்திரத்தை படிக்க வாருங்கள்
ஆசை அரங்கேறி நடிக்க வாருங்கள்

Lyrics in English

PS: Kaadhal sarithirathai padikka vaarungal
Aasai arangaeri nadikka vaarungal
Kaadhal sarithirathai padikka vaarungal
Aasai arangaeri nadikka vaarungal
Megathai oonjalittu aadai vaitha Maeni ingae
Mogathai aadai ittu moodi vaitha Raani ingae
Megathai oonjalittu aadai vaitha Maeni ingae
Mogathai aadai ittu moodi vaitha Raani ingae
Kodhikkum kodai thanikkum vaelai
Kadai kan jaadai thodukkum paavai
Kaadhal sarithiratthai padikka vaarungal
Aasai arangaeri nadikka vaarungal

TMS: Valai kai kondu valaikkum chendu
Sevvila neerai idai thaangum ilam vaazhai thandu
Valai kai kondu valaikkum chendu
Sevvila neerai idai thaangum ilam vaazhai thandu
Malar thaer ondru pani kan kondu
Than maharaajan kudiyaera varum naeram indru
Kodikkul aadaum kanikkul oorum
Inikkum saaram kidaikkum kaalam
Aanandha naadagathai Aada vandha paathirangal
Aaramba naalai Enni kaathirukkum naethirangal
Kaadhal sarithirathai padikka vandhaayo
Aasai arangaeri nadikka vandhaayo

PS: Iyarkkai kaatchi namakkor saatchi
Nam raajaangam naal thorum radhi dhevan aatchi
Idhazh vaai thirandhu eduthaen virundhu
En malar maeni nogaamal medhuvaaga arundhu
Pani pul meedhu padukkai pottu
Manikkum kavidhai manam pol theettu

TMS: Malai mael nindru kalai maan ondru
Un vizhi paarthu vilangaamal vazhi maarum indru
PS: Mazhai neer kondu mughil pol vandhu
Senthalir poovai thaalaattu thalaivaa nee indru
TMS: Silirkkum angam sivakkum vannam
PS: Anaikkum podhu mayangum maadhu
Kaadhal sarithirathai padikka vaarungal
Aasai arangaeri nadikka vaarungal

Song Details

Movie Name Dr. Siva
Director A.C. Tirulokchandar
Stars Sivaji Ganesan, Manjula, Major Sundarrajan, Nagesh, Manorama
Singers T.M. Soundararajan, P. Susheela
Lyricist Vaali
Musician M.S. Viswanathan
Year 1975

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***