Sunday, October 4, 2020

Thalattu Padi Song Lyrics in Tamil

 Thalattu Padi Song Lyrics in Tamil

தாலாட்டு பாடி தாயாக வேண்டும் தாளாத என் ஆசை சின்னம்மா
வெகு நாளாக என் ஆசை சின்னம்மா
நாளாக என் ஆசை சின்னம்மா

கண்ணான பிள்ளை இல்லாமல் இங்கே கண்ணீரில் வந்தாயே சின்னம்மா
கண்ணான பிள்ளை இல்லாமல் இங்கே கண்ணீரில் வந்தாயே சின்னம்மா
சேயாக நீயும் தாயாக நானும் சீராட்ட வந்தேனே சின்னம்மா
தாலாட்டு பாடி தாயாக வேண்டும் தாளாத என் ஆசை சின்னம்மா
வெகு நாளாக என் ஆசை சின்னம்மா

ஆறாது ஆறாது அழுதாலும் தீராது ஆனாலும் வழியென்ன தாயே
அறியாத பெண்ணல்ல கனவோடு உறவாடு சுமைதாங்கிக் கல்லாக நீயே
கடல் அலையேன் உறங்கவில்லை கடவுளிடம் ஏனோ கருணை இல்லை
தாலாட்டு பாடி தாயாக வேண்டும் தாளாத என் ஆசை சின்னம்மா
வெகு நாளாக என் ஆசை சின்னம்மா

அன்பான சொந்தங்கள் அபிமான உள்ளங்கள் எந்நாளும் துணையுண்டு தாயே
அணையாத விளக்கொன்று எப்போதும் உனக்குண்டு அறியாத உறவுண்டு தாயே
நதியிருந்தால் கரையிருக்கும் விதியிருந்தால் கண்ணன் துணையிருக்கும்
தாலாட்டு பாடி தாயாக வேண்டும் தாளாத என் ஆசை சின்னம்மா
வெகு நாளாக என் ஆசை சின்னம்மா

Lyrics in English

Thalaattu paadi thaayaaga vendum Thaalaadha ennaasai chinnammaa
Vegu naalaaga ennaasai chinnamma
Naalaaga ennaasai chinnamma

Kannaana pillai illaamal ingae Kanneeril vandhaayae chinnammaa
Kannaana pillai illaamal ingae Kanneeril vandhaayae chinnammaa
Saeyaaga neeyaaga thaayaaga naanum Seeraatta vandhenae chinnammaa
Thalaattu paadi thaayaaga vendum Thaalaadha ennaasai chinnammaa
Vegu naalaaga ennaasai chinnamma

Aaraadhu aaraadhu Azhudhaalum theeraadhu Aanaalum vazhi yenna thaayae
Ariyaadha pennalla kanavodu uravaadu Sumai thaangi kallaaga neeyae
Kadalalai yen urangavillai Kadavulidam yaeno karunai illai
Thalaattu paadi thaayaaga vendum Thaalaadha ennaasai chinnammaa
Vegu naalaaga ennaasai chinnamma

Anbaana sondhangal abimaana ullangal Ennaallum thunai undu thaayae
Anaiyaadha vilakkondru eppodhum unakkundu Ariyaadha uravundu thaayae
Nadhiyirundhaal karai irukkum Vidhi irundhaal kannan thunai irukkum
Thalaattu paadi thaayaaga vendum Thaalaadha ennaasai chinnammaa
Vegu naalaaga ennaasai chinnamma

Song Details

Movie Name Praptham
Stars Sivaji Ganesan, Savitri, Chandrakala, Nagesh
Singers T.M. Soundararajan
Lyricist Kannadasan
Musician M.S. Viswanathan.
Year 1971

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***