Tuesday, May 12, 2020

Oru Naal Ninaitha Kariyam Song Lyrics in Tamil

Oru Naal Ninaitha Kariyam Song Lyrics in Tamil

ஒரு நாள் நினைத்த காரியம் நடக்கும்
உலகம் ரசிக்க வாவென அழைக்கும்
ஒரு நாள் நினைத்த காரியம் நடக்கும்
உலகம் ரசிக்க வாவென அழைக்கும்
ரத்தினத்தில் செய்து வைத்த சித்திரத்தின் மண்டபத்தில்
உறவோ உறவோ உறவோ
பத்து விரல் தொட்டிழுத்து அர்த்தமுள்ள சேதி சொல்ல
வரவோ வரவோ வரவோ
ஒரு நாள் நினைத்த காரியம் நடக்கும்
உலகம் ரசிக்க வாவென அழைக்கும்

மலரில் பனியிட்ட கலை மஞ்சள் முகத்துக்கு திரை
பெண்ணில் நீ ஒரு சிலை இன்று நான் அதன் விலை
கனியில் ஊறிய முகம் கரும்பில் வாங்கிய ரசம்
ரதியை மீறிய சுகம் இன்று நான் அதன் வசம்
ஒரு நாள் நினைத்த காரியம் நடக்கும்
உலகம் ரசிக்க வாவென அழைக்கும்

இறைவன் ஆலயமணி இதுவும் தேவனின் பணி
அணிந்த மங்கல அணி அன்பு இல்லறம் இனி
ஒன்று என்பது வரம் இரண்டு என்பது மணம்
மூன்று என்பது குலம் முடிவில்லாதது சுகம்
ஒரு நாள் நினைத்த காரியம் நடக்கும்
உலகம் ரசிக்க வாவென அழைக்கும்

நதியில் இருபக்கம் கரை நடுவில் எழுவது அலை
அலையை மீறிய நடை வாழ்க்கை தோணியின் கதை
முல்லை என்பது நிலை குறிஞ்சி என்பது குணம்
மருதம் என்பது மணம் வாழ்ந்து வளர்ப்பது இனம்
ஒரு நாள் நினைத்த காரியம் நடக்கும்
உலகம் ரசிக்க வாவென அழைக்கும்
ரத்தினத்தில் செய்து வைத்த சித்திரத்தின் மண்டபத்தில்
உறவோ உறவோ உறவோ
பத்து விரல் தொட்டிழுத்து அர்த்தமுள்ள சேதி சொல்ல
வரவோ வரவோ வரவோ
ஒரு நாள் நினைத்த காரியம் நடக்கும்
உலகம் ரசிக்க வாவென அழைக்கும்

Lyrics in English

Oru Naal Ninaitha Kariyam Nadakum
Ulagam Rasika Vaavena Azhaikum
Oru Naal Ninaitha Kariyam Nadakum
Ulagam Rasika Vaavena Azhaikum
Rathinathil Seithu Vaitha Chithirathin Mandapathil
Uravo Uravo Uravo
Pathu Viral Thottezhuthu Arthamulla Sethi Solla
Varavo Varavo Varavo
Oru Naal Ninaitha Kariyam Nadakum
Ulagam Rasika Vaavena Azhaikum

Malaril Paniyitta Kalai Manjal Mugathuku Thirai
Pennil Nee Oru Silai Indru Naan Athan Vilai
Kaniyil Oriya Mugam Karumbil Vangiya Rasam
Rathiyai Meriya Sugam Indru Naan Athan Vasam
Oru Naal Ninaitha Kariyam Nadakum
Ulagam Rasika Vaavena Azhaikum

Iraivan Aalayamani Idhuvum Devanin Pani
Anintha Mangala Ani Anbu Illaram Ini
Ontru Enbathu Varam Irandu Enbathu Manam
Moontru Enbathu Kulam Mudivillathathu Sugam
Oru Naal Ninaitha Kariyam Nadakum
Ulagam Rasika Vaavena Azhaikum

Nadhiyil Irupakkam Karai Naduvil Ezhuvathu Alai
Alaiyai Meeriya Nadai Vazhalkai Thoniyin Kadhai
Mullai Enbathu Nilai Kurunji Enbathu Kunam
Marutham Enbathu Manam Vanzthu Valarpathu Inam
Oru Naal Ninaitha Kariyam Nadakum
Ulagam Rasika Vaavena Azhaikum
Rathinathil Seithu Vaitha Chithirathin Mandapathil
Uravo Uravo Uravo
Pathu Viral Thottezhuthu Arthamulla Sethi Solla
Varavo Varavo Varavo
Oru Naal Ninaitha Kariyam Nadakum
Ulagam Rasika Vaavena Azhaikum

Song Details

Movie Paadhukaappu
Stars Sivaji Ganesan, Jayalalitha, Sowcar Janaki, Major Sundarrajan, M. N. Nambiar, S. V. Subbaiah, T. S. Balaiah, J. P. Chandrababu , Nagesh, Thengai Srinivasan
Singers T. M. Soundararajan
Lyrics Kannadasan
Musician M.S. Viswanathan
Year 1970

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***