Monday, December 30, 2019

Unakethu Sontham Song Lyrics in Tamil

Unakethu Sontham Song Lyrics in Tamil

குட்டி ஆடு தப்பிவந்தால் குள்ளநரிக்குச் சொந்தம்
குள்ளநரி மாட்டிகிட்டா கொறவனுக்குச் சொந்தம்
தட்டுக் கெட்ட மனிதர் கண்ணில் பட்டதெல்லாம் சொந்தம்
சட்டப்படி பார்க்கப்போனால் எட்டடிதான் சொந்தம்
சட்டப்படி பார்க்கப்போனால் எட்டடிதான் சொந்தம்

உனக்கெது சொந்தம் எனக்கெது சொந்தம் உலகத்துக்கெதுதான் சொந்தமடா
உனக்கெது சொந்தம் எனக்கெது சொந்தம் உலகத்துக்கெதுதான் சொந்தமடா
மனக் கிறுக்கால் நீ உளறுவதாலே வந்த லாபம் மதிமந்தமடா
மனக் கிறுக்கால் நீ உளறுவதாலே வந்த லாபம் மதிமந்தமடா
உனக்கெது சொந்தம் எனக்கெது சொந்தம் உலகத்துக்கெதுதான் சொந்தமடா

கூட்டுலே குஞ்சு பறக்க நினைத்தால் குருவியின் சொந்தம் தீருமடா
ஆட்டுலே குட்டி ஊட்ட மறந்தால் அதோட சொந்தம் மாறுமடா
நீட்டியே வைத்து நெருப்பிடும் போது
காலை நீட்டியே வைத்து நெருப்பிடும் போது நேசம் பாசம் பொருளாசைக்கெல்லாம்
காட்டிய ஒருபிடி வாய்க்கரிசியிலே கணக்கத் தீர்த்திடும் சொந்தமடா

உனக்கெது சொந்தம் எனக்கெது சொந்தம் உலகத்துக்கெதுதான் சொந்தமடா

பாவ கணக்குகளைப் பணத்தாலே மூடிவைத்து
பாசாங்கு வேலை செய்த பகல் வேஷக்காரர்களும்
ஆபத்திலே சிக்கி அழிந்தார்களானாலும்
அடுத்தடுத்து வந்தவரும் அவர்களுக்குத் தம்பியடா

அவரும் வந்தார்
அவரும் வந்தார் இவரும் வந்தார் ஆடினார்
முடிவில் எவருக்குமே தெரியாமே ஓடினார்
மனதில் இருந்ததெல்லாம் மறந்து கண்ணை மூடினார்

அவரும் வந்தார்
அவரும் வந்தார் இவரும் வந்தார் ஆடினார்
முடிவில் எவருக்குமே தெரியாமே ஓடினார்
மனதில் இருந்ததெல்லாம் மறந்து கண்ணை மூடினார்
செவரு வச்சுக் காத்தாலும் செல்வமெல்லாம் சேர்த்தாலும்
செத்த பின்னே அத்தனைக்கும் சொந்தக்காரன் யாரு
நீ துணிவிருந்தா கூறு
ரொம்ப எளியவரும் பெரியவரும் எங்கே போனார் பாரு
அவரு எங்கே போனார் பாரு

அவரும் வந்தார்
அவரும் வந்தார் இவரும் வந்தார் ஆடினார்
முடிவில் எவருக்குமே தெரியாமே ஓடினார்
மனதில் இருந்ததெல்லாம் மறந்து கண்ணை மூடினார்

பொம்பளை எத்தனை ஆம்பிளை எத்தனை
பொறந்ததெத்தனை எறந்ததெத்தனை
வம்பிலே மாட்டிப் போனதெத்தனை 
மானக் கேடாய் ஆனதெத்தனை மூச்சு நின்னா
மூச்சு நின்னா முடிஞ்சுதடி சொந்தம்
அடியே முத்து கண்ணு இதில் எத்தனை எத்தனை ஆனந்தம்
அடியே முத்து கண்ணு இதில் எத்தனை எத்தனை ஆனந்தம்
ஆனந்தம்
உனக்கெது சொந்தம் எனக்கெது சொந்தம்
உலகத்துக்கெதுதான் சொந்தமடா
மனக் கிறுக்கால் நீ உளறுவதாலே வந்த லாபம் மதிமந்தமடா
உனக்கெது சொந்தம் எனக்கெது சொந்தம்
உலகத்துக்கெதுதான் சொந்தமடா

Lyrics in English

Kutti aadu thappivandhaal kullanarikku chontham
Kullanari maattikittaa kuravanukku chontham
Thattukketta manidhar kannil pattathellaam sondham
Sattappadi paarkkapponaal ettadithaan sondham
Sattappadi paarkkapponaal ettadithaan sondham
Hahhaa

Unakkedhu sondham enakkedhu sondham ulagaththu kethuthaan sondhamadaa
Unakkedhu sondham enakkedhu sondham ulagaththu kedhuthaan sondhamadaa
Manakkirukkaal nee ularuvathaalae vandha laapam mathi manthamadaa
Manakkirukkaal nee ularuvathaalae vandha laapam mathi manthamadaa
Unakkedhu sondham Enakkedhu sondham ulagaththu kethuthaan sondhamadaa

Koottulae kunju parakka ninaiththaal kuruviyin sondham theerumadaa
Aattulae kutti ootta marandhaal adhoda sondham maarumadaa
Neettiyae vaiththu neruppidum podhu
Kaalai neettiye vaiththu neruppidum podhu
Nesam paasam porulaasai kellaam kaattiya orupidi vaai karisiyilae
Kanakku theernthidum sondhamadaa

Unakkedhu sondham enakkedhu sondham Ulagaththu kethuthaan sondhamadaa

Paava kanakkugalai panaththaalae moodivaithu
Paasaangu velaiseitha pagal veshakkaarargalum
Aabaththil sikki azhinthaargal aanaalum
Aduththaduththu vanthavarum avarkalukku thambiyadaa

Avarum vandhaar
Avarum vandhaar ivarum vandhaar aadinaar
Mudivil evarukkumae theriyaamae odinaar
Manadhil irunthathellaam marandhu kannai moodinaar

Avarum vandhaar ivarum vandhaar aadinaar
Mudivil evarukkumae theriyaamae odinaar
Manadhil irunthathellaam marandhu kannai moodinaar
Sevaru vachchu kaaththaalum selvamellaam serththaalum
Seththapinnae aththanaikkum sondhakkaaran yaaru
Nee thunivirunthaa kooru
Romba yeliyavarum periyavarum engae ponaar paaru
Avaru engae ponaar paaru

Avarum vandhaar ivarum vandhaar aadinaar
Mudivil evarukkumae theriyaamae odinaar
Manadhil irunthathellaam marandhu kannai moodinaar

Pombala ethanai aambala ethanai Porandhatheththanai irandhathethanai
Vambilae maatti pona thethanai Maana kedaai aana thethanai moochchu ninnaa
Moochchu ninnaa mudinjuthadi sondham
Adiyae muththu kannu idhil ethanai ethanai aanandham
Adiyae muththu kannu idhil ethanai ethanai aanandham
Aanandham
Unakkedhu sondham enakkedhu sondham ulagaththu kethuthaan sondhamadaa
Manakkirukkaal nee ularuvathaalae vandha laapam athu manthamadaa
Unakkedhu sondham enakkedhu sondham ulagaththu kethuthaan sondhamadaa

Song Details

Movie Paasa Valai
Singers C.S. Jayaraman
Lyrics Pattukottai Kalyanasundaram
Musician G. Ramanathan
Year 1956

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***