Saturday, November 30, 2019
Muthukkalo Kangal Song Lyrics in Tamil
By
தமிழன்
@
11/30/2019
Muthukkalo Kangal Song Lyrics in Tamil
TMS: முத்துக்களோ கண்கள் தித்திப்பதோ கன்னம்
சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை தந்துவிட்டேன் என்னை
முத்துக்களோ கண்கள் தித்திப்பதோ கன்னம்
சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை தந்துவிட்டேன் என்னை
PS: படித்த பாடம் என்ன உன் கண்கள் பார்க்கும் பார்வை என்ன
பாலில் ஊறிய ஜாதிப் பூவை சூடத் துடிப்பதென்ன
முத்துக்களே பெண்கள் தித்திப்பதே கன்னம்
சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை தந்து விட்டேன் என்னை
TMS: கன்னிப் பெண்ணை மெல்ல மெல்ல தென்றல் தாலாட்ட
PS: கடலின் அலைகள் ஓடி வந்து காலை நீராட்ட
TMS: எழுந்த இன்பம் என்ன என் எண்ணம் ஏங்கும் ஏக்கமென்ன
PS: விருந்து கேட்பதென்ன அதையும் விரைந்து கேட்பதென்ன
TMS: முத்துக்களோ கண்கள் தித்திப்பதோ கன்னம்
சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை தந்துவிட்டேன் என்னை
PS: ஆசை கொஞ்சம் நாணம் கொஞ்சம் பின்னிப் பார்ப்பதென்ன
TMS: அருகில் நடந்து மடியில் விழுந்து ஆடக் கேட்பதென்ன
PS: மலர்ந்த காதல் என்ன உன் கைகள் மாலையாவதென்ன
TMS: வாழை தோரண மேளத்தோடு பூஜை செய்வதென்ன
PS: முத்துக்களே பெண்கள் தித்திப்பதே கன்னம்
சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை தந்து விட்டேன் என்னை
Lyrics in English
TMS: Muthukkalo kangal thithippatho kannam
sanditha velayil sindikkavae illai thandhuvittaen ennai
Muthukkalo kangal thithippatho kannam
sanditha velayil sindikkavae illai thandhuvittaen ennai
PS: Padittha paadam enna un kangal paarkum paarvai enna
Paalil ooriya jaadhi poovai sooda thudipadenna
Muthukkalae pengal thithippathe kannam
sanditha velayil sindikkavae illai thanduvittaen ennai
TMS: Kanni pennai mella mella thendral thalatta
PS: kadalin alaigal odivandhu kaalai neeraata
TMS: yezhundha inbum enna en ennam yengum yekkam enna
PS: virundhu kaetpadaenna adhayum virainthu kaetpadenna
TMS: Muthukkalo kangal thithippatho kannam
sandhitha velayil sindikkavae illai thanduvittaen ennai
PS: Aasai konjam naanam konjam pinni parpadenna
TMS: arugil nadanthu madiyil vizhunthu aada kaetpadennae
PS: malarndha kaadhal enna un kaigal maalai aavadhenna
TMS: vaazhai thorana melathodu poojai seivadhenna
PS: Muthukkalae pengal thithippathe kannam
sanditha velayil sindikkavae illai thandhuvittaen ennai
Song Details |
|
---|---|
Movie | Nenjirukkumvarai |
Singers | T.M. Soundarajan, P.Susheela |
Lyrics | Kannadasan |
Musician | M.S. Viswanathan |
Year | 1967 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***