Thursday, November 14, 2019

Kannan Vanthan Ange Song Lyrics in Tamil

Kannan Vanthan Ange Song Lyrics in Tamil

SGR: நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு
நல்லவர்க்கும் ஏழையர்க்கும் ஆண்டவனே காப்பு
பசிக்கு விருந்தாவான் நோய்க்கு மருந்தாவான்
பரந்தாமன் சன்னதிக்கு வாராய் நெஞ்சே

SGR: கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான்
ஏழைக் கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான்
கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான்
ஏழைக் கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான்
கண்ணன் வந்தான்

SGR: தேடி நின்ற கண்களிலே கண்ணன் வந்தான்
தீபம் ஒன்று கையில் கொண்டு கண்ணன் வந்தான்
தேடி நின்ற கண்களிலே கண்ணன் வந்தான்
தீபம் ஒன்று கையில் கொண்டு கண்ணன் வந்தான்
கேட்பவர்க்கு கேட்டபடி கண்ணன் வந்தான்
கேள்வியிலே பதிலாகக் கண்ணன் வந்தான்
தர்மம் என்னும் தேரில் ஏறிக் கண்ணன் வந்தான்
தாளாத துயர் தீர்க்க கண்ணன் வந்தான்

SGR: கண்ணன் வந்தான் மாயக் கண்ணன் வந்தான்
கண்ணன் வந்தான்
கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான்
ஏழைக் கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான்
கண்ணன் வந்தான்

SGR: முடவர்களை நடக்க வைக்கும் பிருந்தாவனம்
மூடர்களை அறிய வைக்கும் பிருந்தாவனம்
முடவர்களை நடக்க வைக்கும் பிருந்தாவனம்
மூடர்களை அறிய வைக்கும் பிருந்தாவனம்
குருடர்களைக் காண வைக்கும் பிருந்தாவனம்
ஊமைகளைப் பேச வைக்கும் பிருந்தாவனம்
குருடர்களைக் காண வைக்கும் பிருந்தாவனம்
ஊமைகளைப் பேச வைக்கும் பிருந்தாவனம்
அடையாத கதவிருக்கும் சன்னிதானம்
அஞ்சாத சொல்லிருக்கும் சன்னிதானம்

SGR: சன்னிதானம் கண்ணன் சன்னிதானம்
சன்னிதானம்
கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான்
ஏழைக் கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான்
கண்ணன் வந்தான் கண்ணா கண்ணா கண்ணா

TMS: கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும்
காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும்
கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும்
காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும்
கனி மழலை குரல் கொடுத்துப் பாட வேண்டும்
கண் மறைந்த தாயும் அதைக் கேட்க வேண்டும்
கனி மழலை குரல் கொடுத்துப் பாட வேண்டும்
கண் மறைந்த தாயும் அதைக் கேட்க வேண்டும்
கவலைகளை உன்னிடத்தில் தந்தேன் கண்ணா
கருணையே அருள்செய்ய வருவாய் கண்ணா
கவலைகளை உன்னிடத்தில் தந்தேன் கண்ணா
கருணையே அருள்செய்ய வருவாய் கண்ணா

TMS: கண்ணா கண்ணா கண்ணா கண்ணா
BOTH: கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான்
கண்ணன் வந்தான் கண்ணன் வந்தான்

Lyrics in English

SGR: nambinaar keduvathillai naangu maai theerpu
nallavarkum ezhaiyarkum aandavane kaapu
pasikku virunthavan noiku marunthavan
paranthaman sannathiku vaarai nenje

SGR: kannan vanthan ange kannan vanthan
ezhai kannerai kandathum kannan vanthan
kannan vanthan ange kannan vanthan
ezhai kannerai kandathum kannan vanthan
kannan vanthan aaaaa

SGR: thedi nindra kangalile kannan vanthan
deeepam ondru kaiyilkondu kannan vanthan
thedi nindra kangalile kannan vanthan
deeepam ondru kaiyilkondu kannan vanthan
kettavarku kettapadi kannan vanthan
kelviyile bathilaga kannan vanthan
tharumam ennum theril eri kannan vanthan
thalaatha thuyar theerka kannan vanthan

SGR: kannan vanthan maaya kannan vanthan
kannan vanthan
kannan vanthan ange kannan vanthan
ezhai kannerai kandathum kannan vanthan
kannan vanthan aaaaa

SGR: mudavargalai nadakka veikum brindavanam
moodargalai ariya veikum brindavanam
mudavargalai nadakka veikum brindavanam
moodargalai ariya veikum brindavanam
kurudargalai kaana veikum brindavanam
oomagalai pesa veikum brindavanam
kurudargalai kaana veikum brindavanam
oomagalai pesa veikum brindavanam
adaiyatah kathavirukum sannithanam
anjatha sollirukum sanithanam

SGR: sannithanam kannan sannithanam
sannithanam
kannan vanthan ange kannan vanthan
ezhai kannerai kandathum kannan vanthan
kannan vanthan kannnaaa kannna kannnaaa kannaaaa

TMS: karunai enum kan thriranthu kaata vendum
kaaval enum kai neeti kakka vendum
karunai enum kan thriranthu kaata vendum
kaaval enum kai neeti kakka vendum
kani mazhalai kural koduthu paada vendum
kan maraintha thaiyum athai ketka vendum
kani mazhalai kural koduthu paada vendum
kan maraintha thaiyum athai ketka vendum
kavalaigalai unnidathil thanthen kanna
karunaiye arul seiyya varuvai kanna
kavalaigalai unnidathil thanthen kanna
karunaiye arul seiyya varuvai kanna

TMS: kannaaa kannaa kannaa kannnaa
BOTH: kannan vanthan ange kannan vanthan
kannan vanthan kannan vanthan

Song Details

Movie Ramu
Singers T.M. Soundarajan, Seerkazhi Govindarajan
Lyrics Kannadasan
Musician M.S.Viswanathan
Year 1966

1 comment :

  1. மனதை உருக்கும் பாடல்....நன்றி

    ReplyDelete

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***