Saturday, August 10, 2019

Unnai Paarthu Intha Ulagam Song Lyrics in Tamil

Unnai Paarthu Intha Ulagam Song Lyrics in Tamil

உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது
உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது
உன் செயலைப் பார்த்து உன் நிழலும் வெறுக்கிறது
உன் செயலைப் பார்த்து உன் நிழலும் வெறுக்கிறது
உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது

பாடும் பறவை பாயும் மிருகம்
இவைகளுகெல்லாம் பகுத்தறிவில்லை
ஆனால் அவைகளுக்குள்ளே சூழ்ச்சிகள் இல்லை
உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது

சேவல் கூட தூங்கும் உலகை கூவி எழுப்பும் குரலாலே
ஏவல் செய்யும் காவல் காக்கும் நாய்களும் தங்கள் குணத்தாலே
இரை கிடைத்தாலும் இல்லை என்றாலும்
உறவை வளர்க்கும் காக்கைகளே
இரை கிடைத்தாலும் இல்லை என்றாலும்
உறவை வளர்க்கும் காக்கைகளே
இனத்தை இனமே பகைப்பது எல்லாம்
மனிதன் வகுத்த வாழ்க்கையிலே அஆ
உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது

வானில் நீந்தும் மேகம் கண்டால் வண்ண மயில்கள் ஆடாதோ
வாழை போல தோகை விரிய வளர் பிறை ஆயிரம் தோன்றாதோ
அழகும் கலையும் வாழும் நாடு ஆண்டவன் வீடாய்த் திகழாதோ
அழகும் கலையும் வாழும் நாடு ஆண்டவன் வீடாய்த் திகழாதோ
அவைகளை எல்லாம் அழிக்க நினைத்தால் சரித்திரம் உன்னை இகழாதோ
உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது

நீ கடவுளைப் பார்த்தது கிடையாது
அவன் கறுப்பா சிவப்பா தெரியாது
நீ கடவுளைப் பார்த்தது கிடையாது
அவன் கறுப்பா சிவப்பா தெரியாது
இறைவன் ஒருவன் இருக்கின்றான்
இந்த ஏழைகள் உழைப்பில் சிரிக்கின்றான்
இறைவன் ஒருவன் இருக்கின்றான்
இந்த ஏழைகள் உழைப்பில் சிரிக்கின்றான் ஆஆ

தோன்றத்தான் போகிறது சம உரிமை சமுதாயம்
மறையத்தான் போகிறது தலை வணங்கும் அநியாயம்
மலரத்தான் போகிறது எங்களது புது வாழ்வு
மாறத்தான் போகிறது மனிதா உன் விளையாட்டு

Lyrics in English

Unnai paarththu indha ulgam sirikkiradhu - un 
seyalaip paarththu - un izhalum verukkiradhu 
paadum paravai paayum mirugam 
ivaigalukkellaam paguththarivillai - aanaal 
avaigalukkulley soozhchigal illai (Unnai)

Saeval kooda thoongum ulagai kooviyezhuppum kuralaaley 
aeval seiyum kaavalkaakkum naaigalum thangal gunaththaaley 
irai kidaithaalum illaiyendraalum 
uravai valarkkum kaakkaigaley 
inaththi inamey veruppadhellaam 
manidhan vaguththa vaazhkkaiyiley (Unnai)

Vaanil neendhum maegam kandaal 
vanna mayilgal aadaadho vaazhai poley thogai viriya 
valarpirai aayiram thondraadho 
azhagum kalaiyum vaazhum naadu aandavan veedaai thigazhaadho 
alaigalaiyellaam azhaikka ninaithaal 
sarithiram unnai igazhaadho (Unnai)

Nee kadavulai paarththadhu kidhaiyaadhu - avan 
karuppaa sigappaa theiyaadhu 
iraivan oruvan irukkindraan - indha 
yezhaigal uzhaippil sirikkindraan 
thondrathaan pogiradhu sama urimai samudhaayam 
malaiyaththaan pogiradhu engaladhu pudhu vaazhvu 
maaraththaan pogiradhu manidhaa un vilaiyaattu

Song Details

Movie Adimai Penn
Singer T.M. Soundarajan
Lyrics Vaali
Musician K.V. Mahadevan
Year 1969

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***