Wednesday, November 21, 2018

Mogam athu muppathu naal song lyrics

Mogam athu muppathu naal song lyrics

Movie : Anaya Vilakku

Music : M.S.Viswanathan
Singer : P.Suseela
Lyrics : Vaali
Year : 1975

மோகம் அது முப்பது நாள்
ஆசை அது அறுபது நாள்
இதயம் கலந்த காதல் என்றால்
புதிதாய்த் தோன்றும் ஒவ்வொரு நாள் (மோகம்)

பருவக் கால மழையைப் போலும்
இளமை காணும் உறவு - அந்த
மழைக்குப் பின்னால் தூவானம் போல்
முதுமைக் கால நினைவு

குமாியாக இருக்கும்போது
கூடல் என்பது இனிக்கும் - அந்த
இனிப்பு என்றும் கசப்பதில்லை
பாட்டியாகும் வரைக்கும் (மோகம்)

ஊறும் தேனை மூடி வைத்தது
உதவு என்னும் கதவு - அதில்
உனக்குப் பாதி எனக்குப் பாதி
எடுத்துக் கொள்ள உதவு

ஆசைக் கடலில் ஆட வந்தது
அழகு என்னும் படகு - அதில்
மிதக்கும்போது மயக்கம் வந்ததைப்
புாிந்துக் கொண்டது பிறகு (மோகம்)

சோழன் மகனைச் சுமந்த வண்ணம்
வாழும் எனது உள்ளம் - அவன்
பொன்னி நதியைப் போல இந்த
கன்னி நதியின் வெள்ளம்

ஏந்த வேண்டும் ஆசை தீர
நீந்த வேண்டும் கண்ணே - நான்
முத்திரை போடும் மேனி அழகு
பத்திரை மாற்றுப் பொன்னே (மோகம்)

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***