Showing posts with label Year-1978. Show all posts

Monday, April 27, 2020

Kamban Emanthan Song Lyrics in Tamil

Kamban Emanthan Song Lyrics in Tamil கம்பன் ஏமாந்தான் இளம் கன்னியரை ஒரு மலர் என்றானே கற்பனை செய்தானே கம்பன் ஏமாந்தான் கம்பன் ஏமா...

Full Lyrics

Kamban Emanthan Song Lyrics in Tamil

கம்பன் ஏமாந்தான் இளம் கன்னியரை ஒரு மலர் என்றானே
கற்பனை செய்தானே கம்பன் ஏமாந்தான்

கம்பன் ஏமாந்தான் இளம் கன்னியரை ஒரு மலர் என்றானே
கற்பனை செய்தானே கம்பன் ஏமாந்தான்

அம்பு விழி என்று ஏன் சொன்னான் அது பாய்வதினால் தானோ
அம்பு விழி என்று ஏன் சொன்னான் அது பாய்வதினால் தானோ
அவள் அறுஞ்சுவைப் பாலென ஏன் சொன்னான் அது கொதிப்பதனால் தானோ
கம்பன் ஏமாந்தான்

தீபத்தின் ஜோதியில் திருக்குறள் படித்தால் தீபத்தின் பெருமையன்றோ
தீபத்தினால் ஒரு நெஞ்சத்தை எரித்தால் தீபமும் பாவமன்றோ
கம்பன் ஏமாந்தான் இளம் கன்னியரை ஒரு மலர் என்றானே
கற்பனை செய்தானே கம்பன் ஏமாந்தான்

வள்ளுவன் இளங்கோ பாரதி என்றொரு வரிசையை நான் கண்டேன்
அந்த வரிசையில் உள்ளவர் மட்டுமல்ல அட நானும் ஏமாந்தேன்

ஆத்திரம் என்பது பெண்களுக்கெல்லாம் அடுப்படி வரைதானே
ஒரு ஆதிக்க நாயகன் சாதிக்க வந்தால் அடங்குதல் முறைதானே
கம்பன் ஏமாந்தான் இளம் கன்னியரை ஒரு மலர் என்றானே
கற்பனை செய்தானே கம்பன் ஏமாந்தான் ஹ ஹ கம்பன் ஏமாந்தான்

Lyrics in English

Kamban Emanthan Ilam kanniyarai oru malar endraanae
Karpanai seidhaanae Kamban Emanthan

Kamban Emanthan Ilam kanniyarai oru malar endraanae
Karpanai seidhaanae Kamban Emanthan

Ambu vizhi endru yaen sonnaan Adhu paaivadhinaal thaano
Ambu vizhi endru yaen sonnaan Adhu paaivadhinaal thaano
Aval arunjuvai paalena yaen sonnaan Adhu kodhippadhinaal thaano
Kamban Emanthan

Dheebathin jodhiyil thirukkural padithaal Dheebathin perumaiyandro
Dheebathinaal oru nenjathai erithaal Dheebamum paavamandro
Kamban Emanthan Ilam kanniyarai oru malar endraanae
Karpanai seidhaanae Kamban Emanthan

Valluvan ilango bharathi endroru Varisaiyai naan kanden
Andha varisaiyil ullavar mattumalla Ada naanum yaemaandhaen

Aathiram enbadhu pengalukkellaam Aduppadi varai thaanae
Oru aadhikka naayagan saadhikka vandhaal Adangudhal murai thaanae
Kamban Emanthan Ilam kanniyarai oru malar endraanae
Karpanai seidhaanae Kamban Emanthan Ha ha Kamban Emanthan

Song Details

Movie Nizhal Nijamakirathu
Stars Kamalhasan, Sumithra, Sarathbabu, Soba
Singers S.P. Balasubramaniam
Lyrics Kannadasan
Musician M.S. Viswanathan
Year 1978

Ilakkanam Marutho Song Lyrics in Tamil

Ilakkanam Marutho Song Lyrics in Tamil SPB : இலக்கணம் மாறுதோ ஹோ ஹோ ஓ ஓஓ இலக்கணம் மாறுதோ இலக்கியம் ஆனதோ இதுவரை நடித்தது அது எந்த வே...

Full Lyrics

Ilakkanam Marutho Song Lyrics in Tamil

SPB: இலக்கணம் மாறுதோ ஹோ ஹோ ஓ ஓஓ
இலக்கணம் மாறுதோ இலக்கியம் ஆனதோ
இதுவரை நடித்தது அது எந்த வேடம் இது என்ன பாடம்
இதுவரை நடித்தது அது எந்த வேடம் இது என்ன பாடம்
இலக்கணம் மாறுதோ ஹோ ஓ

SPB: கல்லான முல்லை இன்றென்ன வாசம்
காற்றான ராகம் ஏன் இந்த கானம்
வெண்மேகம் அன்று கார்மேகம் இன்று
யார் சொல்லித் தந்தார் மழைக்காலம் என்று
மன்மதன் என்பவன் கண் திறந்தானோ பெண்மை தந்தானோ
இலக்கணம் மாறுதோ ஹோ ஓ

VJ: என் வாழ்க்கை நதியில் கரை ஒன்று கண்டேன்
உன் நெஞ்சில் ஏனோ கறை ஒன்று கண்டேன்
என் வாழ்க்கை நதியில் கரை ஒன்று கண்டேன்
உன் நெஞ்சில் ஏனோ கறை ஒன்று கண்டேன்
புரியாததாலே திரை போட்டு வைத்தேன்
திரை போட்ட போதும் அணை போட்டதில்லை
மறைத்திடும் திரைதனை விலக்கி வைப்பாயோ விலக்கி வைப்பாயோ

SPB: தள்ளாடும் பிள்ளை உள்ளமும் வெள்ளை
தாலாட்டுப் பாட ஆதாரம் இல்லை
தெய்வங்கள் எல்லாம் உனக்காக பாடும்
பாடாமல் போனால் எது தெய்வமாகும்
மறுபடி திறக்கும் உனக்கொரு பாதை உரைப்பது கீதை

VJ: மணி ஓசை என்ன இடி ஓசை என்ன
எது வந்த போதும் நீ கேட்டதில்லை
நிழலாக வந்து அருள் செய்யும் தெய்வம்
நிஜமாக வந்து எனை காக்கக் கண்டேன்
நீ எது நான் எது ஏனிந்த சொந்தம் பூர்வ ஜென்ம பந்தம்

VJ: ஹா ஆஆ ஹா ஆ ஹா ஹா ஆஆ ஹா ஆ ஹா
இலக்கணம் மாறுதோ இலக்கியம் ஆனதோ
இதுவரை நடித்தது அது என்ன வேடம் இது என்ன பாடம்

Lyrics in English

SPB: Ilakkanam maarudho Hoo hoo oo oo
Ilakkanam maarudho Ilakkiyam aanadho
Idhu varai nadithadhu Adhu enna vaedam Idhu enna paadam
Idhu varai nadithadhu Adhu enna vaedam Idhu enna paadam
Ilakkanam maarudho Hoo hoo oo oo

SPB: Kallaana mullai indrenna vaasam
Kaatraana raagam yaen indha gaanam
Ven maegam andru kaar maegam indru
Yaar solli thandhaar mazhai kaalam endru
Manmadhan enbavan kan thirandhaano Penmai thandhaano
Ilakkanam maarudho Hoo hoo oo oo

VJ: En vaazhkkai nadhiyil Karai ondru kanden
Un nenjil yaeno karai ondru kanden
En vaazhkkai nadhiyil Karai ondru kanden
Un nenjil yaeno karai ondru kanden
Puriyaadhadhaalae thirai pottu vaithen
Thirai potta podhum anai pottadhillai
Maraithidum thirai thanai vilakki vaippaayo Vilakki vaippaayo

SPB: Thallaadum pillai ullamum vellai
Thaalaattu paada aadhaaram illai
Dheivangal ellaam unakkaaga paadum
Paadaamal ponaal edhu dheivamaagum
Marubadi thirakkum unakkoru paadhai Uraippadhu geedhai

VJ: Mani osai enna idi osai enna
Edhu vandha podhum nee kettadhillai
Nizhalaaga vandhu arul seiyum dheivam
Nijamaaga vandhu enai kaakka kanden
Nee edhu naan edhu yaen indha sondham Poorva jenma bandham

VJ: Haa aaa aaa haaa aaa
Ilakkanam maarudho Ilakkiyam aanadho
Idhu varai nadithadhu Adhu enna vaedam Idhu enna paadam

Song Details

Movie Nizhal Nijamakirathu
Stars Kamalhasan, Sumithra, Sarathbabu, Soba
Singers S.P. Balasubramaniam,Vani Jayaram
Lyrics Kannadasan
Musician M.S. Viswanathan
Year 1978